சற்று முன்பு வானிலை - கார்த்திகா

விழிக் கோளங்களை
மறைத்திட்ட இமைகளினுள்ளே
நடனமாடும் வெட்கத்தில்
உறைந்திடும் தித்திப்பினில்
மென் தீண்டல்கள்

உள்ளங்கை வெப்பம்
உயிரை உரசும்
நின் வசந்தங்களின்
வரவேற்பில் சிற்சில
கால மாற்றங்கள்
விலகுதலின் மறுப்பில்..

கொஞ்சலில் கொஞ்சம்
சிந்திய வெண்மணிகள்
பற்களை வசீகரித்த
கர்வத்துடன்..

கால்கள் இணைந்து
நடக்கும் சாலையில்
மரங்கள் அள்ளி வீசும்
மஞ்சள் பூக்கள்..

போ எனவும்
போய் வரவும் மனமின்றி
விரல்களின் கலந்துரையாடல்களின்
முடிவில் ஒத்திகை நடக்கிறது
சிற்றிதழ்களின் சிலிர்ப்பினில்!!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Mar-15, 9:48 pm)
பார்வை : 97

மேலே