காதலர்களே கேளுங்கள் - சந்தோஷ்
அவளுக்கும் அவனுக்கும் இடையே
யாதுமில்லை என தீர்மானித்த
பத்தாவது நொடியில்
மரணித்து விட்டது
அந்த காதல் !
பதினொன்றாவது நிமிடத்தில்
அவனுக்குள் உயிர்ப்பித்தது
அதே ஜாடையில்
அதே காதல்..!
பண்ணிரெண்டாம் நொடி முதலாய்
நெருப்பு வேள்வியில்
உருகி மருகிறது
அவனிருதயத்தில் விரவியிருக்கும்
அவள் மீதான புனிதக்காதல்..
நட்புகளிடம் செய்திச்சொல்லி
சேர்த்துவைக்க விண்ணப்பிக்கவா?
இல்லை..இல்லை
பரிந்துரைத்தா மலரவேண்டும்
காதல் பூக்கள் ?
காதலில் ஒரு விதிவிலக்கு
உதிர்ந்த காதல்
மீண்டு. மீண்டும்.
மலரலாம்.. மலரவேண்டும்.
காதலர்களே......!
சிறு பெரும் பிழைகளை
மன்னிக்க பழகிக்கொள்ளுங்கள்.
இருவரிடத்திலுள்ள
பிடிவாத குதிரைக்கு
கடிவாளம் போட்டு அடக்குங்கள்.
தயவுசெய்து உங்கள்
கர்வ கழுதைககாக
காதலை கொலை செய்யாதீர்கள்.
முடிவெடுத்து சேர்ந்துவிட்டு
முடியாதென்று முரண்பட்டு
மூர்க்கதனமிடும்
குருட்டு இதயங்களே.....!
எவனையோ எவளையோ
காதலித்துவிட்டு பின்பு
வேறு எந்த
புதியவள் உடனோ
புதியவன் உடனோ
செய்வது என்ன ?
திருமணமா ? விபச்சாரமா ?
----------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.