நல்ல தோனி

சென்ற முறையும் உலகக் கோப்பை உன்னாலன்றோ - தோனி
இம்முறையும் அரையிறுதி கொண்டு சென்றது நீயே அன்றோ!
இந்தியாவின் மானத்தையே காத்தவன் நீயே..என்றும்
கிரிக்கெட்டின் குளிர் தென்றலும் புயலும் நீயே !

ரோஹித் கோலி ரைனாவால் புண்ணியமில்லை..
சீக்கிரத்தில் தனையிழந்த தவான் துணையும் இல்லை..
ராக்கோழி ரஹானாவும் உறுதியோடில்லை- நீ
ஒருவன் மட்டும் கரை சேர்க்கும் அதிர்ஷ்டமுமில்லை !

இத்தனை மேட்ச் ஜெயித்த போதும் நீ தெரியவில்லையே
டயம்ஸ் நவ்வு தொலைக்காட்சிக்கு ஆண்டி தோனியே
அப்பழுக்கு இல்லாத அருமைத் தலைவனே - உன்னால்தான்
இவ்வளவு ஏற்றம் பெற்றது இந்திய அணியுமே..!

போனால் போகட்டும் போடா !

எழுதியவர் : கருணா (27-Mar-15, 11:07 am)
பார்வை : 487

மேலே