வறுமை

அமுதூட்ட அன்னையில்லை;
அரவணைக்க தந்தையில்லை;

புசிக்க உணவில்லை;
வசிக்க இடமில்லை;

உடுத்த உடையில்லை;
நடக்க தெம்பில்லை;

ஆயிரமாய்ஆசைகளை,
அடக்கிய மனதோடு,

வறுமையின்பிணைப்பால்,
வற்றிய வயிறோடு,

வறண்ட நாவோடு,
இருண்ட உலகிலே,

பிறந்தது பிழையோ?
இறப்பது முறையோ?

இறந்தால்உறங்குமோ – இந்த
வற்றாத வறுமை!!!

எழுதியவர் : செந்தில் லோகு மா (27-Mar-15, 12:40 pm)
பார்வை : 108

மேலே