பயணத்தின் முடிவை தேடி - உதயா

அந்தி நேரத்தில்
பகலிடம் மண்டியிடுகிறேன்
விரைவில் இருளினை
அழைத்துவிடாதே என்று

நான் பணிபுரியும்
பகுதி நேரத்தின்
நேரம் நீடித்தால்
இன்றாவது தங்கைக் கேட்ட
கண்ணாடி வளையலை
வாங்கிச் செல்வேன்

அதிகாலை நேரத்தில்
இரண்டு மணியளவில்
இரவிடம் பிச்சைக்கேக்கிறேன்
இன்றொரு நாளாவது
மூன்று மணிநேரம்
தூங்கிக்கொள்கிறேன் என்று

இமைகளை துயில்கள்
கட்டி போட்டிருந்தும்
கரத்தில் ஏந்திய
சுமைகளின் வலியை
பொறுக்க முடியாமல்
கண்ணீர் துயிலினை கலைத்தது

கல்லூரி வகுப்பறையில்
சோர்வால் மூளை பாடத்தினை
புறக்கணித்தாலும்
குடும்பத்தின் நிலையை அறிந்த
என் மனமோ மூளை
ஒழுங்குபடுத்துகிறது

சில நேரங்களில் மட்டுமே
பலரின் தேகத்தை
சோர்வு அணைக்கும்
ஆனால் என் தேகமோ
சொர்வாலேபிணைக்கப்பட்டது
என்று தான் சோர்வில்லா நிலையை
என் தேகம் உணருமோ

என்றாவது ஒருநாள்
விடியுமென எண்ணியே
என் கால்கள்
இரவும் பகலும்
பயணிக்கிறது

பயணம் முடிவதாய்
தெரியவில்லை
விடியல் விடிவதாய்
தென்படவில்லை ......

எழுதியவர் : udayakumar (31-Mar-15, 6:45 pm)
பார்வை : 93

மேலே