என்னவனே

விழியின் அருகே சிறு முத்துக்கள்!
வருத்தத்தின் அடையாளமோ அவை ??
பூரிப்பின் உச்சம் அன்றோ !!

வருவாய் என பார்த்திருந்த காலங்கள்
கனவோ என கரைந்து போக,
நினைவாக்கினாய் என் கனவுகளை !

அண்டமும் அணுவானதோ
அறிவோ துரும்பானதோ !
கற்பனையும் வளம் பெற்றதோ
கல்லையும் ரசிக்கும் கலை
கற்று தேர்ந்ததோ என் கண்கள் !!

மேகங்கள் நகர்ந்து உனக்கு வழியமைக்க அதைக்
காணும் கடலலையை என் புன்னகை !

தேடி வந்து என் காதலை சொல்ல ,
துடிக்கிறதே என் இதயம் இரட்டிப்பு வேகத்தில் -
உனக்கும் சேர்த்து !!!

எழுதியவர் : archana (1-Apr-15, 2:33 am)
சேர்த்தது : நவிரா
Tanglish : ennavane
பார்வை : 116

புதிய படைப்புகள்

மேலே