பிறந்த நாள் கேக்

ஒரு நாள் நம்ம மணியண்ணை கேக் வாங்குவதற்காக கடை ஒன்றுக்கு சென்றார்.

"தம்பி... கேக் என்ன விலை...?"

"என்னத்துக்கு அண்ணே கேக். பிறந்த நாளுக்கா... திருமண விழாவுக்கா... அதை சொன்னால் தானே அண்ணே சொல்லலாம்..." - கடைக்காரர்

"பிறந்த நாளுக்கு தான் தம்பி..."

"அப்போ... அந்த நீல கலர்ல இருக்குறது....?"

"சீ... அதெல்லாம் ஒரு கலரா தம்பி...?"

"அந்த பூ போட்டது...?"

"நான் என்ன சின்ன பிள்ளையா?"

"அப்போ மற்றதை பாருகொவேன்?"

"ம்.... ம்.. பிடிக்கலபா..."

எதை காட்டினாலும் நொட்டை நொடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

"இதை பாருங்கோ அண்ணே... கொஞ்சம் விலை கூடத்தான். ஆனாலும் புது வரவு. நல்லா இருக்கும்..."

"என்ன தம்பி... இந்த கேக் இங்கேயே நிறைய பிறந்த நாளை கண்டிருக்கும் போல...?" - மணியண்ணை

"அண்ணே நீங்க கேக் வாங்காட்டி கூட பரவாயில்லை. இங்க இருந்து போயிடுங்க... வியாபாரத்தை கெடுக்காம..." கடைக்காரர்

"ங்ஙே....” - மணியண்ணை

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (1-Apr-15, 10:33 pm)
Tanglish : pirantha naal kek
பார்வை : 202

மேலே