இன்ப உறவுகள்
உண்மை தான்...
உறவுகள் தரும் உணர்வுகள்
தான் எத்துனை எத்தனை...
தந்தையாய் தமையன்கள்
தாயாக தமக்கைகள்
அன்பு பொழியும் உறவுகள்
தோல் கொடுக்கும் தோழர்கள்
மலை மலையாய் மனங்கள்
வகை வகையாய் வரங்கள்
தொட்டிலில் உறங்கும் மழழைமகள்
மடியில் தூங்குகையில் எத்துனை சுகம்
உலகமறியா பிஞ்சு மகன் மழழையில்
பஞ்சு மனதின் மென்மைதான் என்னே...
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
ஆழ்மனதில், அத்துனையும் நிஜஉருக்களாய் என் எதிரில்...
உறவுகளாய்...
இரா நவீன் குமார்