மனமே அலையாதே
மனமே அலையாதே - பாழும்
மனமே அலையாதே..
கண் மூடியே நீ வாழ்வது
ஓர் வாழ்க்கையா
விண் தாண்டியே நீ கேட்பது
ஓர் தேவையா ..
விரோதங்கள் யாவும்
கொல்வாயா...
மௌனத்தினால் அதை
வெல்வாயா..
சித்தம் தெளிவதை நீயும்
காண்பாயா ...
நீ உண்மை பேசும் போது
உன் தூய்மை என்னைக் காக்கும்
என் வாழ்வின் அர்த்தம்
மாறும் இல்லையா ..
ஒரு நட்பை தொலைக்கும் போது
கடும் புயலில் என்னை இழக்கும்
உன் கோபப் புன்னகை
வேண்டாம் இல்லையா..
உன் குரலைத் தேடு
அதில் பொய்கள் வேண்டாம்
உன் தூய்மை பாடு
அதில் வஞ்சம் வேண்டாம்
மனிதத்தை இழக்க விரும்பவில்லை
நான் உன் வழி போக ஆசையில்லை
என்னை உயர்த்திட நீ வழி
செய்வாயா?..
அதுவரை..
மனமே அலையாதே - பாழும்
மனமே அலையாதே..!
கங்காருகள் போல்
நீ ... துள்ளாதே !

