இரவுடன் கலந்த குளிர்ச்சி
சந்திரனின் ஒளி வான் முழுவதும்
பரவி குளிர்ச்சியை தழுவி கொள்ள
சந்திரனின் காதலியாகிய
அல்லி துயில் நீங்கி விழித்து
காதலனின் நலத்தை
விசாரித்து ஒளியை பெற
மல்லிகையின் நறுமணம்
சந்திரனிடம் காதல் தூது
செல்ல நடுனிசி நாய்கள்
ஊளை இட்டு தம் கம்பிரமான
குரலை ஊர் முழுவதும்
பரப்பி பயத்தின் உச்ச கட்டத்திற்கு
ஊரை ஆழ்த்திட
வீதியோரங்களில் சில்வண்டுகள்
ரீங்காரம் இட்டு காணம் பாடி
சிரித்திட மின்மினி பூச்சிகள்
ஒளியின் ரூபமாய் காற்றின்
திசைக்கு ஏற்ப அசைந்து
பறந்து செல்ல
பசுமையின் ஆதாரமான பச்சை
மரங்கள் காற்றில் மெல்ல
மெல்ல அசைந்து இரவின்
குளிர்ச்சியை வரவேற்கின்றது