வரம் தருவாயா என் காதலியே
நீ என்னோடு நடந்த நொடிகளில் எல்லாம்
உன் நிழல் படும் தூரத்தில் நான் நடந்தேன்
நெருக்கத்தை தூண்டிடும் இரவுகளில் கூட
உன்னில் கரைந்த நிழல் போல் தான் துணை வந்தேன்
நம் எதிரில் நடந்த காதலர்கள் எல்லாம்
கை கோர்த்தும் தோல் மேல் கை வைத்தும் செல்ல
அதை பார்த்ததும் தலையை திருப்பி கொண்டேன்
என் மனம் ஆசை கொள்ள கூடாதென
நீ என்னிடம் காட்டும் கண்ணியமே
உன்னிடம் அதிகம் பிடித்ததென்பாய்
என்னை எண்ணி நானே பெருமை கொள்வேன்
இதை இறுதி வரை தொடர எண்ணிடுவேன்
இன்று அத்தனையும் மாறி போனதடி
துன்பங்கள் என் மனதை கொல்லுதடி
ஆறுதலை அதுவும் தேடுதடி
எனக்கொரு வரம் தா என கேட்குதடி
உன் கை கோர்த்து நெடுந்தூரம் செல்ல வேண்டும்
கட்டி அணைத்தபடி சில நிமிடம் நிற்க வேண்டும்
முழுமையாய் சில நேரம் உன் மடியில் உறங்க வேண்டும்
காதலியே நீ என் மறு தாயே
செய்வாயா எனக்காக இதை நீயே...!!!