இதோ என் வாழ்கை

ஆயிரம் ஆயிரமாய் செலவழித்தும் படிக்கவில்லை
என்னை நீ பிடிக்கும் என்றதால்

கடலும் அச்சப்படும் உன் உள் வாங்கலை பார்த்து
நான் மட்டும் ஏனோ உன்னை என்னுள் வாங்கிக்கொண்டேன்

சின்னதொரு கொசு என் கண்ணில் விழ
நான் லாரியில் விழுந்தேன்

சகுனி என்னும் ஓர் உறவு உன் மனதை ஆட்கொள்ள
அலை அலையாய் அடிக்குதே உன் வெறுப்பு

நீந்த தெரியாத என்னை ஆள்கடலில் இழுத்து சென்றுவிட்டு
கரைக்கு செல் என்றால் இது நாயமா?

காதல் என் கண்ணை மட்டும் மறைக்கவில்லை
எனக்காக தியாகம் செய்த என் தந்தை
எனக்காக பரிந்து பேசிய என் தாய்
எனக்காக அறிவுரை கூறிய நண்பர்கள்
இவை அனைத்தையும் மறைத்து விட்டது

அன்றே இறந்திருந்தால் எனக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும்
யோசிக்காமல் நீ பேசும் பேச்சு நரகத்தின் தண்டனைக்கு ஒப்பற்றது

கல்லறையில் காதலிக்கும் ஷாஜகான் என்னிடம் கூறுகிறான்
உன்னை விடகூடாதென்று

நானும் வேசி அல்ல வேறு பெண்ணை மணப்பதற்கும் நினைபதற்கும்
நானும் கொலம்பி தவிக்குறேன் உனக்கு கல்லறை கட்டலாமா?

கொடு உன் கல்யாண பத்திரிக்கை
அடிக்கிறேன் உனக்கு கருமாரி பத்திரிக்கை

அந்த இறைவனிடம் வரம் கேட்பேன்
பேயாய் உன்னை முதலில் இருந்து காதலிக்க அல்ல

அவர் இருக்கும் வரை நான் உன்னை காதல் செய்ய

இது 26 வரி கவிதை அல்ல எனது 17 வருட காதலின் குமுறல்

எழுதியவர் : குணா (6-Apr-15, 12:24 am)
சேர்த்தது : குணசேகரன்
Tanglish : itho en vaazhkai
பார்வை : 116

மேலே