காதல் - தேன்மொழியன்

காதல் ..
~~~~~~

அறையில் திரியும்
இரவினை
விழியில் ரசிக்கும் விசித்திரம் ...!

நுரையில் வழியும்
வெண்மையை
நுகர்ந்து சிலிர்க்கும் தனித்திறம் ..!

உள்ளத்தில் உலவும்
உருவத்தை
உருட்டி மிரட்டும் கொடூரம் ..!

கன்னத்தில் வீழ்ந்த
குழியை
புதையலாய் நினைக்கும் மூளை..!

சிலையைச் செதுக்கும்
உளியை
எளிதில் எறியும் ஏமாளி ..!

உயிரை வருடும்
கவியை
படிக்கத் துடிக்கும் இதயம் ..!

விளிப்பில் உள்ள
விதைகளை
விற்றுப் பார்க்கும் விளையாட்டு ..!

கிழக்கில் உதித்த
சூரியனை
உதைத்து திட்டும் தெனாவட்டு ..!

மனதைக் கிழிக்கும்
வார்த்தையை
அன்பில் மறக்கும் குழந்தை ..!

இதழில் தெறிக்கும்
புன்னகையில்
வாழ்ந்து மடியும் மனிதம் ..!

காதல் ....

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (7-Apr-15, 9:23 pm)
பார்வை : 102

மேலே