காதலே வலி

காதலே ...
இன்றும் நீ உடலை விட்டு
உயிரைத்தான் எடுத்துக் கொள்கிறாய்

ரணமாய் துடிக்கும் பொழுதுகளில்
மரணமாய் உன் நினைவுகளை தந்து போகிறாய்

தப்பிச் செல்ல நினைத்தாலே
நினைவுகளை விட்டு நீங்காமல் வருகிறாய்

விடையைக் கேட்டாலே -எனை
விடைபெற்று செல்கிறாய்


இதயத்தை கொலை செய்தவனுக்குத்தான்
ஆயுள் தண்டனை
இதயத்தைக் கொலை செய்ய காரணமான -உன்
நினைவுகளால் எனக்கு மட்டும் தான்
ஆயுள் தண்டனை

எழுதியவர் : கீர்த்தனா (8-Apr-15, 9:15 pm)
Tanglish : kaathale vali
பார்வை : 446

மேலே