போகாதே என் உயிர் எடுத்துக் கொண்டு
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கென நீ இருப்பாயென
நான் என் மனதிலே உன்னையே சுமந்திருந்தேன்
என்றும் சுமந்திருப்பேன் !
உன் சுகங்களையும் சுமைகளையும் நான் காத்திடுவேன்!
ஒரு போதும் உன் கண்ணில் தண்ணீர் வாராமல் என் அன்பால் தாங்கிடுவேன் !
என் மடியில் உன்னை அரவணைத்து உறங்கவைப்பேன் !
உன் தாய்போல் நானிருக்க என்னினே பெண்ணே என் அன்பை புரிந்துக் கொள்ளாமல் என்னை ஏனோ அலட்சியப்படுத்தினாய் மற்றவர்களுக்காக ,,
என்னை நீ அவமானம் படுத்தினாய் அன்பே கடைசியாக ஒன்று சொல்கிறேன் !
நீ என்னை வெறுப்பதையும்
நான் ரசிக்கிறேன் ஏனென்றால் நான் உன்னை அவ்வளவு உயிராய் நேசிக்கிறேன்.