அமுக்கி வாசி

ஆனையை பன்றி என்றேன்
உளறுகிறாய் என்றான்
பின்னே களிறு என்று வச்சுக்கோ என்றேன்
களிறு...ஆனை ஆச்சே என்றான்
களிறு...பன்றியும் ஆச்சே என்றேன்
என்ன ! களிறு பன்றியா...என்றான்
களிறு தான் ஆண் ஆனை ஆண் பன்றி என்று
அர்த்தத்தை 'அமுக்கி வாசி'த்து இருக்கிறார்கள் ஆன்றோர்கள் என்றேன்
வராக அவதாரம் தான் பிள்ளையார் என்பதற்குள்
அப்படியா...என்று சிரித்தான். சென்று விட்டா ன்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Apr-15, 9:48 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 67

மேலே