ஏமாற்றமும் வலிகளும் - சகி

வலிகள்

ஏமாற்றமும் வலிகளும்
என்றுமே நம் வாழ்வில் .
நம்முடன் பயணம்
மேற்கொள்ளும் நண்பர்கள் ....

ஏமாற்றமும் வலிகளும்
இல்லையெனில் வாழ்வின்
அர்த்தங்கள்புலப்படாமல்
போகக்கூடும் .....

வலிகளையும் ஏமாற்றமும்
நமக்கு பரிசாக கொடுக்கும்
உறவுகளையும் நேசிக்க
கற்றுக்கொள்வோம் ...

இன்பத்தில் மட்டுமே
நிறைந்தது நம் வாழ்வல்ல ...

துன்பமும் வலிகளும்
கொண்டதே நம் வாழ்க்கைப்பாதை ...

தொடர்வோம் அனைத்தையும்
கடந்து வருவோம் ....

வாழ்க்கைப்பாதையில் ....

எழுதியவர் : சகி (10-Apr-15, 5:58 pm)
பார்வை : 144

மேலே