அது இது எது

அதுக்குமட்டும் இல்லையாக்கும்

அதுக்கு மட்டும் இல்லையாக்கும்!
ஒதுங்க மட்டும் கொல்லையாக்கும்!
ஆசைக் கில்லை சாதியாக்கும்!--இது
பேச என்ன நீதியாக்கும்!

அதை ரசிக்கப் பசிக்குதாக்கும்!
சதை இனிக்க மணக்குதாக்கும்!
மேலுங் கீழும் கசக்குதாக்கும்!--அது
கீழும் மேலும் ருசிக்குதாக்கும்!

இசைந்தால் வேலை இருக்குதாக்கும்!
இணைந்தால் மாலை மறுக்குதாக்கும்!
தீண்டல் மட்டும் வெல்லமாக்கும்!--இது
தீண்டாமை இல்லையாக்கும்!.

சகோதரிக்கு என்னவாக்கும்!
சண்டாளிக்கே உள்ளதாக்கும்!
இல்லாளில் இல்லதாக்கும்!--அது
ஏழையிடம் நல்லதாக்கும்!

நக்கத்தேனும் வடியுதாக்கும்!
பக்கமாதும் இனிக்குதாக்கும்!
தொக்கு இந்த ஏழையாக்கும்!--இது
கக்கும் விந்து பேழையாக்கும்!

குழந்தைப் பாசம் மறந்ததாக்கும்!
மழலைப் பாவம் மரத்ததாக்கும்!
மனிதகுணம் தொலைந்ததாக்கும்!--அது
முடிந்துமனம் நிறைந்ததாக்கும்!

கண நேரத் தொல்லையாக்கும்!
காக்கும் காமம் எல்லையாக்கும்!
பிணமானால் என்ன கேக்கும்?--இது
குணமானால் நன்மையாக்கும்!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (11-Apr-15, 8:10 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 80

மேலே