விடிவு காலம் ……
பணியாளாக்கினாய்
நீ என்னை
பெண் பார்க்க வந்தப் போது
கடனாளாக்கினாய் (என் தந்தையை)
நீ என் கழுத்தில்
தாலிக் கட்டியப் போது
தேசியாக்கினாய்
நீ என் படுக்கையை
பகிர்ந்தப் போது
கோமாளியாக்கினாய்
நீ என் பேச்சை
கேலி கிண்டல் செய்தப் போது
பைத்தியக்காரியாக்கினாய்
நீ என்னைப்
பார்த்து சிரிக்கும் போது
வெறுமையாக்கினாய்
நீ என் ரத்தத்தை
உறிஞ்சியப் போது
கணவனாக எண்ணியதை விட
காதலனாக எண்ணியதே அதிகம்
கால்காசுக்கு உதவாத செல்லா
காசாக மாற்றிவிட்டாயே
உனக்கு முந்தானை விரித்ததற்கு
உடலும் கூசுது
உள்ளமும் நோகுது
உயிருள்ள பிணமாக நடமாடுகிறேன்
விடிவு காலம் வரும் எண்ணி
[இவள் தான் என் தமிழச்சி. கணவன் செய்த தவற்றை கூறாமல் தன் ஆதங்கத்தை மட்டும் வெளிப்படுத்துகிறாள். இனியாவது முயற்சி செய்யலாம் திருந்துவதற்கு அல்ல
புரிந்து கொள்வதற்கு.]