வேடம் கொள்ளாதே
வேடம் இட்டு
தடம் புரண்டு
வாழ்வதைவிட
நீ நீயாக இருந்து பார்!
விச ஜந்துக்களும்
ஆட்கொல்லிப்பேய்களும்
உனைக் கண்டு ஓடி ஔிந்துகொள்ளும்
சிந்நி புதிதாய்ச் சிந்தி
சந்தியில் கண்டதைவிட
சிந்தையில் கொண்டதை
அரங்கேற்று
பலர் அறியும் மேதை நீயாவாய்
பார் புகழ நீ வாழ்வாய்!
பொறாமை கொண்டாரும்
உனைக் கண்டு வீழ்வார்!