துவேசம்

திருந்தாத ஜென்மம்,
வருந்தாத பிறவி,
நாகரீகம் தெரியாத ஆசாமி,
என்றெல்லாம்,
காதில்விலக்கேட்டேன் !
அவள் தோழியருடன் கதைக்கையில் !
கேட்ட எனக்கு !
உச்சி குளிர்ந்து உடலெல்லாம் மழை !
அடிப்படைக் காரணங்கள் !
வெகுவிரைவாய் அழிந்துவிடுகிறது காதலில் !
அதற்கும் மேல் சத்தியங்கள் !
ஒரு தரம் படிக்கிறேன்,
அவள் தந்த கடிதத்தை !

"அன்பனே !
நீ யோசிக்க மறந்தாலும்,
எனை நேசிக்க மறக்காதே,
நீ இல்லையேல்,
என் உடல் இற்றுவிடும்,
உயிர் செத்துவிடும்,
கனவில்கூட யோசித்து,
உன் பிரிவை தந்துவிடாதே !
நான் யாசித்தே இறப்பேன் உன்னை !
நேசி என்னை,
உன் நெடிய வாழ்வு முழுதும் !

நீ யார் தெரியுமா?
நான் கண்டெடுத்த மாணிக்கம் !
என் கனவுகளின் கர்ப்பகவிருட்சம் !
எனக்காக வந்தடைந்த காமதேனு !
எனை சுழன்றுகொண்ட வானவில் !
இன்னும் இன்னும்,
எண்ணமுடியாத விண்மீன்கள் !
உன்மீதான எண்ணங்களும் ஏக்கங்களும் !

நான் கண்டெடுத்த மாணிக்கமே !
என் உலகுக்கு !
சூரியன் சந்திரன்,
இரண்டுமே நீ ஒருவன்தான் !
நீயின்றி இல்லை இவளுக்கு,
விழிப்பும் உறக்கமும்,
ஒருவேளை என்னை,
மறக்கத் தோன்றினால்,
விஷம் கொடுத்து முடித்துவிடு எனை,
உன் மடியில் கிடத்தி உச்சி முகர்ந்து !
கட்டாயம் தந்துவிடாதே !
நீயில்லாத தனிமை எனும் கொடுமையை"

பனிக்கிறேன் !
கனக்கிறது பையில் வைத்த உயில் !
அர்ப்பக்காரணங்கள்,
அர்த்தமில்லாமல் பிரித்தது தெரியும் !
அதற்கென,
கொத்தாகவா கொய்துபோவாய் !
அர்த்தங்கள் கற்பித்த அன்பு உறவை?

சத்தியமாய் சொல்கிறேன் !
காதலியின் வார்த்தைகளில்,
படும் அவமானம் !
ஆயிரம் ஊசிக்குத்தல்கள் !
அப்படியே யானை ஏறி இறங்கும் அவலம் !
விழுந்த இடத்திலேயே விழும் நூறு சவுக்கடி !
கண்களில் மிளகாய்பொடியை
அள்ளிக்கொட்டும் கொடுமை !
பெயர் தெரியாத ஊரில்,
காசில்லாமல் சுற்றும் நெருக்கடி !
பசிக்கு உணவு வைத்து,
பார்க்கமட்டும் சொல்கிற கயமை !

நான் தரவில்லை உனக்கு !
வாக்குறுதிகளும் நிச்சயங்களும் !
நல்லவேளை,
அதையெல்லாம் செய்யமுடியாமல் !
உனக்குமல்லவா தடை வந்திருக்கும் !
உனை தாழ்த்த,
எப்போதும்,
என் மனம் இடம் கொடுக்காது !
செய்தால்,
நான் உட்கொள்ளும் உணவு,
உடனடியாய் செரிக்காது !
கண்டிப்பாய்,
இவைகள் உனை காயப்படுத்த அல்ல !
அடக்கவும் சுமக்கவும் அடைக்கவும்,
இயலாமல் உனை மறக்கவும் முடியாமல்,
அடங்காமல் அழுது அனாதையாய் அலையும்,
நிழல் தொலைத்த நெஞ்சகத்தின் ஒரு துளிப்புலம்பல் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (11-Apr-15, 9:52 pm)
பார்வை : 98

மேலே