சுயம்

சுயத்தை இழந்து
சோகத்தில் உழலாதே

சுயத்தை இழந்தவன்
மற்றவன் சிந்தனைக்கு
கொத்தடிமை
அது
சிறைக் கூண்டில்
சிறகடிக்கும் பறவை
சுதந்திர வானில்
பறப்பதாக நினைத்துக் கொள்ளும்
போலிப் பாவனை

சாத்தான்க‌ள் காதில்
வேதம் ஓதலாம்
சத்தியம் நெஞ்சில் கோலோச்சினால்
ஒரு காது வழியே புகுந்த
சாத்தானின் வேதம்
ம்று காது வழியே விரைந்து
வெளியேறி விடும்

சுயம்
சத்தியம்
லட்சியம்
சுதந்திர புருஷனின்
எழுத்து வேதம்

இது இல்லாதவன்
எழுத்து வடிவில்
எண்ண‌த்தை சுமத்தும்
வெறுங் காகிதம்

கவின் சாரலன்


கவிக்குறிப்பு : குறிப்பாக இளைய வயதினார்க்கு ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-15, 5:09 pm)
Tanglish : suyam
பார்வை : 316

மேலே