குனிந்து செல் வளைந்து நில்

தன் நிலத்தில்
எவன் தயவுமின்றி
உழுதுண்டும் ..
தலை நிமிர்ந்தும்
வாழ்ந்தவரும் ..

வணிகத்தில்
முன்னோடியாய் ..
திரைகடலோடியும்
பெரும் செல்வம்
சேர்த்தவரும்..

இன்னும் பல தொழிலும்
வாழ்வினில் .. இலக்கணமும்
இலக்கியமாய் வாழ்வும்
இன்புற்று இருந்தவரும்..
இந்நாட்டில் ..

இன்றைக்கு ..
எலிகளானார்..
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாய்
அடிமைகளாய் வாழ்ந்த வழக்கம் ..
குனிகின்றார் .. கூப்பிடுமுன்
கூழைக் கும்பிடு போடுகின்றார்..
அதை கேட்டு வாங்கும் திவான்களும்
அவருக்கு மேலுள்ளோர் முன்
மண்டியிட்டே மாள்கின்றார் ..

இப்படியே அடி முதல் நுனி வரை ..
அந்நிய ஆட்சிக்கு தம்மை
அடகு வைத்து வாழ்ந்த முறை
தொடர்கிறது இன்றுவரை..

ஏமாந்தவன் முன் புலிவேடம்
போடுகின்றார்..தன்னிலும்
வலியோன் முன் தள்ளாட்டம்
ஆடுகின்றார் ..எந்நாளும்..!
இவர் தம் வீடு உயர்வதற்கே
தலை கீழும் நின்றிடுவார்
அம்மணமாய்..
அதுவே வாழ்வின் மணமாய்
நுகர்ந்திருப்பார்..
தலை குனிந்திருப்பார்..
இவரெல்லாம் மனிதரிலே
மாணிக்கமாய் தம்மை
நினைந்திருப்பார்..

ஐயகோ!
..
இந்நிலை என்று
மறந்திடுவார்..?

எழுதியவர் : கருணா (13-Apr-15, 10:52 pm)
பார்வை : 1513

மேலே