மொழி சொன்னவள் வாழி
தமிழ் பிறந்தாள்
---------------------------------
தமிழ்....
வருடங்களாய் மலர்ந்தாள்,
வாசல் கோலங்களாய் சிரித்தாள்.
அன்று போல் இன்றும் வந்தவளாம்
சித்திரை
சேலைக்காரி...
இவளை முகர்ந்தால்,
மூர்ச்சிறைக்கும்.
அத்துனை பொருட்ச்செறிவின்,
அழகு ததும்பும் வார்த்தைகளின்
வசீகர இராகவி...
இத்துனை அழகு சமைந்தவளின் மடியிலினிலே நானும் ஓர் இளங்கிள்ளையாயினேன்...
இவள் பிறப்பை உணரும் போது,
வரங்களும்,
மேண்மைகளும் திரண்டதாய் கனவு புரளும் ,
சுகம் தீண்டி உயிரை கிளரும்.
நான் எனும் இருப்புக்கு,
இனிப்பு இவள்..
மன்மத காளியே...
உண்பாற் காதல் மொழிவேன்..
கானம் பொழிவேன்...
நிதர்சன தேவியே...
தமிழாளே....
நாளும் உண்னை தொழுவேன்
வாழி நீ...
**இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்**
-சங்கர்சிவக்குமார்