அழியாத பிறப்பெடுத்து

கோடிக் கொள்ளிக்கண்கள்
பட்டும் அழியாத அதிசயமொழி - அவள்.

அதிசீக்கிரம் அழிவுகாலம் கண்ட மொழிகளும் சரித்திரத்தில் உண்டு
அவற்றில் அழியாமை பிறப்பெடுத்து அடிவானம் தொட்டவள் - அவள்.

ஒரு மொழியில் தேனுண்டு
மறு மொழியில் பாலுண்டு
தேனும் பாலும் கலந்து
அமிர்தம் சொட்டும் இதழ்களுடையவள் - அவள்.

அங்கே 'அவள்' என்பதை மொழியாக்கி மொழியை தமிழாக்கி தமிழைத் தாயாக்கினேன் - என் வரிகளில்....

எழுதியவர் : அரிபா (14-Apr-15, 3:40 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 156

மேலே