வாழ்க்கை கனவல்ல
உறங்கிய பொழுதினில்
மெலிதாய் உன் ஞாபகம்
மயிலிரகாய் வருடியது...
கனவின் வீதியில்
கவலை ஏதுமின்றி பாத்திரங்களாய்
மாறியெனைத் திருடியது...
குறட்டை இடைவெளியில்
குத்தாட்டம் போட்டபடி
ஏனோ இதயத்தை நெருடியது...
விழித்துப் பார்த்ததும்
முறைத்துப் பார்த்தபடி
கையில் கரண்டியுடன் கரடியது.. மன்னிக்கவும் நீயாஅது..???