எப்படி அழைப்பேனோ உன்னை

எனக்கான என்னவனே
எங்கு இருக்கிறாயோ
இப்போது நீ
என்று வருவாயோ
என் வாழ்வில்
என்று சந்திக்குமோ
நம் விழிகள்
எப்படி அழைப்பேனோ
நான் உன்னை

நாதா என்று சொல்லும்
நயத்தில் நம்பிக்கையில்லை
அத்தான் என்று உருகும்
அன்புமொழி பிடிபடவில்லை

என்னங்க என்று காலில்விழ
ஏனோ விருப்பமில்லை
நண்பா என்று தோள் சாயவே
நாட்டம் உண்டெனக்கு
டேய் டா என்று கூப்பிடவே
ஆசை உண்டெனக்கு

எல்லோர் முன்னிலையிலும்
ஏங்க என்னங்க என்று
பண்பாட்டில் குழைந்தாலும்
நம்மறையில் நான்
'என்னடா' என்று செல்லம்
கொஞ்சவே விரும்புகிறேன்

நிறைய எதிர்பார்ப்புகளோடும்
கொஞ்சம் கனவுகளோடும் நான்

எழுதியவர் : யாழினி வ (16-Apr-15, 3:26 am)
சேர்த்தது : யாழினி வ
பார்வை : 107

மேலே