பெற்ற மனம்...
கண்டாங்கிச் சீலை கட்டி
கழுத்து நெறைய நகை போட்டு
கல்யாணம் செய்து வைப்பார்
மகள் பிரசவத்தின் சந்தோஷத்தில்
திக்குமுக்காடி ரெண்டு வீடும்
நில புலன்கள் எழுதி வைப்பார்
வருடம் ரெண்டு போக
பார்க்க பார்க்க பாலும் புளிக்கும்
மகளுக்கும் மருமகனுக்கும்
குடி குட்டின்னு மருமகன் விளையாட்டில்
மகளும் தாங்காமல் பிறந்த வீட்டில்
மருமகன் அவன் தந்தை வீட்டில்...
வீட்டுக்கு வந்த தோழியிடம்
பெற்ற மனம் அழுததால்
தோழியின் பொறுப்பில் மகளின் வாழ்க்கை...
தீர்க்கக் கூடியதோ பிரச்சினை
கணவன் மனைவியை சேர்த்து வைப்பது?
கடவுளின் துணையோடு தொடங்குகிறாள் தோழி...
செஸ் போர்டில் காயை நகர்த்த
சென்சார் தாண்டி போக வேண்டுமோ?
தும்பிக்கையானின் நம்பிக்கையே துணையாய்...