கௌரவங்கள்

ஒரு ரூபாய் தருமத்துக்காய்
உயரக்குவித்து வணங்கும்
உலர்ந்துபோன யாசகர்களும்

வளைந்து கதவு திறக்கும்
வணிகவளாகத்தின்
வாயில் காப்போனும்

ஓடும் பேருந்தில்
ஒதுங்கி இடம் கொடுக்கும்
அறிமுகமில்லா உபகாரிகளும்

கடந்து போகும் வாகனத்தில்
பிஞ்சுக்கையசைத்து
டாட்டா காட்டிவிட்டுபோகும்
சின்னச்சிறு தெய்வங்களும்

கோணலாய் வணக்கம் வைத்து
உரசாமல் ஒதுங்கிச்செல்லும்
தெருவோரக் குடிகாரனும்

துரத்திக்குறைக்காத
தெரு நாய்களும்

விரிந்து கிடக்கும்
அவமான சாத்தியங்களில்
ஆங்காங்கே கிடைக்கும்
ஆறுதலான கௌரவங்கள்

எழுதியவர் : பிரணவன் (16-Apr-15, 11:07 pm)
பார்வை : 113

மேலே