கூட்டுக் குடும்பம் -தொடர்கதை
கூட்டுக் குடும்பம் -1
அம்மா அம்மா என்று அழைத்தவாறு மிக வேகமாக என் செல்ல மகன் சமையல் அறைக்குள் ஓடி வந்தான் ...என்னடா கண்ணா என்ன விஷயம் என்று கேட்டவாறு அங்கு இருந்த கைப்பிடி துணியில் என் ஈர கைகளை துடைத்தேன்..
அம்மா என்னோட இங்கிலீஷ் டீச்சர் எங்கள ஒரு ப்ராஜெக்ட் செய்ய சொல்லி இருக்காங்க அதற்காக நான் நான்கு நாட்கள் என் தோழனின் வீட்டில் தங்க வேண்டும் ..நான் அங்கு பார்க்கும் விஷயங்கள் வியந்த விஷயங்களை கொண்டு என் ப்ராஜெக்ட் சப்மிட் செய்ய வேண்டும் என்றான்...ஆனால் இதில் ஒரு கண்டிசன் உள்ளது நான் எந்த நண்பனின் வீட்டில் போய் தங்க போகிறேன் என்று முன் கூட்டியே சொல்ல மாட்டோம் ...அங்கு சென்ற பின்னே வீட்டிற்கு தெரிய படுத்துவோம் ..அது போல் நம் வீட்டிற்கும் என் நண்பர்கள் எப்பொழுது வருவார்கள் என்று தெரியாது ..என்று கூறினான்
நான் தற்பொழுது உள்ள CBSC படிப்பை நினைத்து வியந்தேன் ..இதில் எல்லாம் ஆக்டிவிட்டி முறையின் மூலம் மாணவர்கள் நேரடியாக பங்கேற்று புரிந்து விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் ..நான் என் மகனிடம் கண்ணா உன்னை பிரிந்து எப்படி 4 நாட்கள் இருப்பது என்று விசனப்பட்டேன் ...
அவனோ ஜாலியாக நண்பன் வீட்டில் போய் தங்குவதற்கு தயாரானான் ...
என் மகன் அப்பு அவனது நண்பன் குமரேசன் வீட்டிற்கு சென்றான் ..அப்புவோடு ராஜா சலீம் கார்த்தியும் சென்றனர் ...
அப்பு தயங்கிய படியே நண்பன் குமரேசனிடம் கேட்டான் ...குமரேசா உன் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தாமல் எங்களை அழைத்து செல்கிறாயே அவர்களுக்கு சிரமமாக இருக்காதா என்றான் ...நமது ஆசிரியை அவ்வாறு தானே கூறி உள்ளார்கள் பார்க்கலாம் வாருங்கள் என்று அழைத்து சென்றான்
குமரேசன் வீட்டை பார்த்தாலே தெரிந்தது அவர்கள் மத்திய தர வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அந்த நான்கு மாணவர்களும் சிறிய புத்தகத்தில் அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பு எடுத்துக்கொண்டார்கள்
குமரேசன் வீட்டில் அனைவரும் நுழைந்தவுடன் குமரேசனின் அம்மா அவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள் ..குமரேசனின் அத்தை அவர்களுக்கு குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தாள்..அப்புவிற்கு ஆச்சர்யமாக இருந்தது அவர்கள் வீட்டில் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் இருந்தனர் ...அப்பு நினைத்துக்கொண்டான் அவர்கள் வீட்டில் ஏதோ விஷேசம் போல் இருக்கிறது ...நம் வீடாக இருந்தால் விஷேச நாட்களில் எனக்கே மிகுந்த வேலை உள்ளது இதில் உன் நண்பர்கள் வேறா என்று அம்மா தன்னை திட்டி தீர்த்து விடுவாள் என்று எண்ணிக்கொண்டான் .....
........................ தொடரும் ......................