துளிப்பாக்கள் - 2

@@@@@@@@@@@@@@@@@@
நான் தொடுவதால்
தவிர்த்துவிடுகின்றன
பட்டாம்பூச்சிகள்
@@@@@@@@@@@@@@@@@@
மயானமாகி விடுகின்றன
நீரில்லா குட்டைகள்
மீன்களுக்கு ...
@@@@@@@@@@@@@@@@@@
தவறாமல் இடம் பிடித்து
விடுகிறது கூட்டாஞ்சோறுகளில்
கொட்டாங்குச்சிகள்
@@@@@@@@@@@@@@@@@@
உரெல்லாம் சேர்ந்து சுற்றினாலும்
தண்டனை எனக்கு
செருப்புகள்
@@@@@@@@@@@@@@@@@@
வாடகைக்கு குடிவந்துவிடுகிறது
முகங்களில்
மூக்குகண்ணாடிகள்
@@@@@@@@@@@@@@@@@@