சாத்தியம்

நீயும் நானும்
தூர தூரமாய் பயணப்பட்டோம்
நீ உன்னிலிருந்து
என்னை பிய்த்தெறிந்து விட்டு
உனக்கான
வேறு முகமூடிகளைத் தேடுகிறாய்
எதிர்கொள்ளும் சந்தோஷத் திற்காகவும்
சங்கடத்திற்க்காகவும்
நானும் தேடுகிறேன்
ஒரு நூறு முகமூடிகளை
அழுகையை ஏற்றுக்கொள்ளும்
மனதிற்குத்தானே
சிரிப்பது சாத்தியமாகிறது.

எழுதியவர் : வசு (20-Apr-15, 9:12 am)
Tanglish : saathiyam
பார்வை : 121

மேலே