காக்கை கார்முகில் கண்ணன்
காக்கை தலையில்
எச்சமிட்டது
நிமிர்ந்து பார்த்தேன்
வானத்தை !
சூழ்ந்திருந்த கருமுகில்
மழை பொழிந்தது
தலை தூய்மையானது !
காக்கையில் கண்ணனை
பார்க்கும் பக்குவம்
எனக்கில்லை பாரதி !
கார்முகிலில் நான்
கண்ணனைப் பார்க்கிறேன் !
~~~கல்பனா பாரதி~~~