கனவே கலைந்து போ பாகம்- 20 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

ஆகஸ்ட் இருபதாம் தேதி நந்தினியும் பிரசாத்தும் பயணப்பட்ட ஆட்டோவில், இருக்கையில் குத்தியபடி நசுங்கிப் போன மருந்துக் குழலும் ஊசியும் கிடைக்கின்றன.....

................................................................................................................................................................................................

மேம்பாலத்தில் ஏசி ஆனந்த்தும் டிஸ்பி முரளியும் நின்றிருந்தனர். ஆகஸ்டு இருபதாம் தேதியன்று ஆட்டோ மேம்பாலத்தில் எந்த நிலையிலிருந்ததோ அதே நிலையில் நிறுத்தினான் ஆட்டோ டிரைவர். பிரசாத்தாக இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் நந்தினியாக காந்தனும். மூர்த்தியின் உடம்பில் கயிறு பிணைக்கப்பட்டு மேம்பாலத்தோடு கட்டப்பட்டிருந்தது ! ஒத்திகை ! ! ! !

“ ஸ்டார்ட் ! ” என்றார் ஆனந்த்.

காந்தன் மஞ்சள் கைப்பையிலிருந்து ஊசி மருந்தை எடுத்து பிரசாத்துக்கு அதாவது மூர்த்திக்கு போட முயற்சித்தான். மூர்த்தியின் கை அனிச்சையாக ஊசியை காந்தனை நோக்கித் திருப்பியது. காந்தன் மூர்த்தியை தள்ளி விட்டான். ஆட்டோவிலிருந்து கிட்டத்தட்ட உடல் முழுதும் வெளி வர எவ்வளவு விசை தேவைப்படுகிறது என்பதை நேருக்கு நேர் கணித்தனர்....

அதன் பிறகு நடந்ததுதான் புரிந்து கொள்ள முடியாத அபத்தம் !

“உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே” என்று காந்தனும், “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல; கவலைப்படாதீங்க” என்று மூர்த்தியும் சொல்லிக் கொண்டனர்.

ஆட்டோ அப்படியே பட்டினப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போனது.

“ சார், சார், சார்.. அந்த பொம்பளைதான்! அன்னைக்கு நந்தினியம்மாவை இறக்கி விட்டது அந்தம்மாதான்.... ! ”

ஆட்டோ டிரைவர் பரபரப்பில் கத்தினான்.

ஆட்டோ டிரைவரை அனுப்பி விட்டு “அந்த பொம்பளையை” நெருங்கியது போலிஸ். தோளைத் தொட்டு திருப்பியது!

அங்கு பெண் வேடத்தில் இருந்தது....

இன்னொரு போலிஸ் அதிகாரி !

கற்பகா காம்ளக்ஸ் அச்சு அசல் அன்று கொடுத்தது போல் தயார் பண்ணிக் கொடுத்த மெட்டி, அமுக்குத்தோடு போன்ற அயிட்டங்களில் பெண்ணாகக் கலக்கியது அரவிந்த் என்கிற அதிகாரி! அசப்பில் பிரசாத்தை போலவே தோன்றினார் ! ! ! ! ! ! !

நட்சத்திர ஹோட்டல் தனியறையில் தனித்திருந்தனர் ஆனந்த்தும், முரளியும்.

“ சொல்லுங்க சார் ! ” என்றார் ஆனந்த் முரளியிடம்.

“ சிலது புரியலியே? ”

“ புரிஞ்ச வரைக்கும் சொல்லுங்க ? ”

“ முதல்ல வினோதினி உயிரோட வந்துட்டாள்கிறது நந்தினி சொன்ன பொய் ! ”

“ ஏன் பொய் சொல்லணும்? ”

“ பிரசாத்தை வரவழைக்க! அவனை மேம்பாலத்தில் கூட்டிட்டுப் போக ! ”

“ ஏன்? ”

“ பிரசாத்தை கொலை பண்ண ! மயக்க ஊசி போட்டு மயங்கினதும் பிரசாத்தை மேலே இருந்து தள்ளி விட ! ”

“ பிரசாத்தை ஏன் கொலை பண்ணணும்? ”

“ நந்தினி பத்தின ஏதோ ரகசியம் பிரசாத்துக்கு தெரிஞ்சிருக்கு ! ”

“ ஆனா பிரசாத் தப்பிச்சிட்டான் ! மயக்க ஊசி நந்தினிக்கே குத்திடிச்சு ! ”

“ அடுத்ததுதாங்க புரியல. ஒரு கொலை முயற்சி நடந்திருக்கு ! அப்புறம் எப்படி ரெண்டு பேரும் தோழமையோட பேசிட்டு வருவாங்க? ”

“ மயக்க ஊசி குத்தியும் நந்தினி ஏன் மயங்கலே? ”

“ பிரசாத் பொய் சொல்றவன் இல்லே ! அப்படியும் ஊசி மருந்து விஷயத்தை நம்ம கிட்ட ஏன் சொல்லல? நந்தினிதான் தன்னை காப்பாத்தினதா வேற சொன்னான்? ”

இதற்கிடையில் அவர்களைப் பார்க்க கையெழுத்து நிபுணர் வந்தார்.

“ இந்த தான்யாவோட கையெழுத்தை பற்றி கொஞ்சம் பேசணும் ! ” விவரித்தார்:

“ சார், இந்த கையெழுத்து இந்த நபரோட சொந்தக் கையெழுத்து இல்லே ! இவர் நந்தினி மாதிரி கையெழுத்து போட முயற்சி பண்ணி முயற்சி பண்ணி இவரோட ஒரிஜினல் கையெழுத்தே மாறிப் போயிடுச்சி! நந்தினி கையெழுத்தோட ஓரளவு ஒத்தும் போகுது ! ”

“ என்ன சொல்ல வர்றீங்க? ”

“ அதாவது ஆனந்த் சார் ! நீங்க அழகா இருக்கீங்க ! பெண்ணா மாற முயற்சி பண்றீங்க ! உங்களால முழுக்க முழுக்க பெண்ணா மாற முடியுமா? ஓரளவுதான் மாற முடியும் ! அதே சமயம் உங்க ஒரிஜினாலிடி உங்களை விட்டுப் போயிடும் ! ஆணாகவும் இல்லாம, பெண்ணாகவும் இல்லாம வேற ஒரு பெர்சனாலிட்டியா ஆவீங்க ! அதுதான் தான்யாவோட கையெழுத்து ! புரியுதோ? ”

“ ஹூம் ! எங்களுக்குப் புரிஞ்சிடுச்சி ! கேஸ் தெளிவா குழம்பிடுச்சி ! ”

சந்தோஷமாக கையெழுத்து நிபுணர் வெளியேறினார்.



தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (20-Apr-15, 6:29 pm)
பார்வை : 299

மேலே