உன்னை நினைத்து

மலரினும் மெல்லிய மனம்கொண்ட உன்னை
காற்றும் ஒரு நிமிடம் பின்தொடரும்
உன் மேனியை தொட
சென்னை தண்ணீர்கூட ஏங்கும்
ஒருமுறை நீ அதை உன்
மேனியில் தழுவ விடமாட்டயா என்று
நீ அமர்வதால்தான் என்னவோ உன்
இருக்கைகூட இறுமாப்பாய் திமிர்கிறது
என்னை பார்த்து
உன் படுக்கைக்கு கிடைத்த வரம்
எனக்கென்று கிடைக்குமென்று
தினம் தினம் ஏங்குகின்றேன்
உன்னை நினைத்து உண்மையான காதலுடன்

எழுதியவர் : சிவா (22-Apr-15, 12:31 pm)
சேர்த்தது : SIVARAMAN P
Tanglish : unnai ninaiththu
பார்வை : 87

மேலே