தனிமை
தனிமை என்னை
தாயின் அன்புக்கு ஏங்க வைத்தது !
அந்த தனிமை தான்
என்னை அழ வைத்தது !
அந்த தனிமை தான்
என்னை கோபப்படுத்தியது !
அந்த தனிமை தான்
எனக்கு ஆறுதல் கூறியது !
அந்த தனிமை தான்
எந்தன் சகோதரர்களின் பாசத்தை
புரிய வைத்தது !
அந்த தனிமை தான் என்னை
சுறுசுறுப்பாய் செயல்பட வைத்தது !
அந்த தனிமை தான் காதலில்
ஜெயித்தவற்கு சுகத்தை கொடுத்தது!
அந்த தனிமை தான் காதலில்
தோற்றவர்களுக்கு நரகமாகியது!
அந்த தனிமை தான்
பிரிந்து சென்ற நண்பர்களை
நினைத்து மனம் கலங்க வைத்தது !
அந்த தனிமை தான்
தாய்மையின் சுகத்தை
பெண்களுக்கு உணர வைத்தது !
அந்த தனிமை தான்
எந்தன் வாழ்விற்கு வழி காட்டியது !
அந்த தனிமை தான்
சில சமயம் சொர்க்கமானது!
ஆனால்
எந்தன் வாழ்வில் அதுவே
நிரந்தரமாகி விட்டதால்
அந்த தனிமை
எனக்கு நரகமாகி விட்டது !
தனிமையில் வாடும்
உங்கள் தோழன்
தங்கதுரை