நிழல் ஏங்கியது

நீ தனிமையில் இருந்தபொழுது
நான் உன்னுடன் இருந்தேன்
உன்னுடன் கைகோர்த்து நடப்பவன் வந்தபொழுது
என்னை நீ மறைத்தாய் மறந்தாய்
அவன் பிரிந்து சென்றபொழுதோ
நீ தனித்து நின்றாய்,
என்றும் பிரியாமல்
உன் உயிர் மூச்சிருக்கும் வரை
உன்னுடன் நான் இருப்பதை எப்பொழுது உணர்வாய்
என்றும் உனது நிழலாய் நான் இருப்பேன்
என்றும் எனது ஒளியாய் நீ இருப்பாயா??