யார்மீது தவறு …

தெய்வத்தின் முயற்சி
பெரியது வலியது …
இது வையகத்தில் மானிடனுக்கு
புரியவா போகுது …!!!

வாயில்லா ஜீவன்கூட
வாலை ஆட்டி
நன்றி சொல்ல ….!!

செவியில்ல நாகம்
கூட அசைவிலே
நடனம் ஆட …!!

கண்ணில்லா உளி கூட
அழகாய்
சிற்பம் செதுக்கிட …!!

நாசி இல்லா
மீன்கள் கூட
ஏரியிலே உயிர் வாழ்ந்திட …!!

பொய்யில்லா பூக்கள் எல்லாம்
தினம்தோறும்
அழகை சொல்லிட …!!

இத்தனை இல்லாதவைகள் கூட
பாரினில் உனக்கு மட்டும்
இருக்கையில் யார்மீது தவறு
சொல்கின்றாய் மானிடா …!!!

இன்னும் நீ இயல் ஆமையிடம்
உறவு கொள்ளாது முயல் ….!
சிகரம் தொட்டு நீ சீக்கிரம்
அடைந்திடுவாய் புகழ் …!!!

எழுதியவர் : வீ கே (25-Apr-15, 11:41 am)
பார்வை : 71

மேலே