பேருந்துப்பயணம்

பேரூந்துப்பயணம்
"""""""""""""""""""""""""""
உலர்ந்த தெருவில்
ஏதோ ஒரு பார ஊர்தி
துப்பிச்சென்ற எச்சில்பருக்கையை,
அவசரத்தில் உண்ணும்
பட்சிகளும்"""

யாரோ ஒருவர் எழும்பிச்செல்ல
முற்படும்,
இருக்கைக்கு காத்திருக்கும்
நிறைமாதகர்ப்பிணியும்""

பள்ளிச்சீருடைகளும்
பாவாடைதாவணிகளும்
பேரூந்தை பிடித்துவிட்ட
நிம்மதி மூச்சுக்களும்"""

தெருவோர தேனீர்சாலையில்
உதட்டுச்சுவை அறியா
உள் நுழையும்!
சுடுதேனீர் விரும்பிகளும்"""

இரவுவேலை முடிந்து
அழைப்பு மணிஅழுத்தி
மனைவியின்தாமத வருகையில்......,
எரிச்சலை உமிழும் நிமிடங்களும்"""

பக்கத்துஇருக்கை பயணியாக.
பாடப்புத்தகத்தை பதியவிட்டு,
பிரியமானவனின் வருகையில்...,,,...,,?
மிரண்ட விழிகளுடன்,
மூச்சுமுட்டிய
நொடிப்பொழதுகளும்"""

இலவசமாக கிடைத்த
காலவதியான உணவை
கஸ்டப்பட்டு உண்ணும்
தெருவோர யாசகனும்"""

இந்த காலை நேர ரம்மியமான
பேரூந்துப்பயணத்தின் யன்னல்ஓர!
இருக்கையின் சுகங்களும்! சோகங்களும்!
மன உறுத்தள்களும்!!!

லாஷிகா

எழுதியவர் : லவன். கேர்ணிங் டென்மார்க் (26-Apr-15, 2:30 am)
சேர்த்தது : லவன்
பார்வை : 72

மேலே