காதல் மெழுகு
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணாளன் சிந்தும் வியர்வை மழைச்சொட்டு
விண்நிற்கும் வெய்யோன் குடிக்காமல் –மண்மேல்
விழுந்து விருட்சம் குடிக்கட்டு மென்றே
எழுந்த குடையோ இது.
சோற்றுக் குழைக்குஞ் சுடுவெய்யில் வேளை
காற்றன லாகக் கசிதலை = மாற்ற
நிழல்துணி ஏந்தி நெகிழ்ந்தவள் உள்ளம்
மழையெனப் பெய்யும் முகில்!
ஏழைக் கணவனுக்கு ஏற்ற துணையாக
ஊழியம் செய்தற் குடன்பட்டு –ஊழி
வரையில் உருகும் வரமெடுத்து வாழ்வாய்
கரைகின்ற காதல் மெழுகு.