ஆயுட்பறியந்த சிட்சை

ஆயுட்பறியந்த சிட்சை
===================
புறம்,
வெய்யில் அறியாத ஒரு மரத்தடியிலிருந்து
அசமயத்து மீட்டிய
அவனின் புல்லாங்குழலோசையின்
ஏகாந்தத்தில் நான்,,,,,,,,,,,,!!!!
சுற்றியுள்ள காசினியின் இரைச்சலை
காணாதிருக்க கேட்காதிருக்க
ஒரு திரையிழுத்து மூடியபோது
ஓரத்தில் இருத்திய
கின்னரக்கீற்றின்மேலே
மழைநின்றப்பின்னால் துளிக்கும்
ஓர் ஒற்றைச்சாரல் எழுப்பிய
சுகந்த சுவரத்தில்
என்னை வாசித்து முடித்திருந்தான் ,,,,,!!!
என்னென்று சொல்வேன் ,,
வளித்துக் கட்டிய பறையில்
தாளங்கொட்டி வழப்பங்கொண்டவனின்
மனசின் குரல்
மாறி மாறி பிறப்பெடுப்பது
எனக்காய்வேண்டி மாத்திரமே என்றிருந்தேன் ,,,,!!!
இவையெல்லாம்,
என்னோடிருந்தவரை
கண்டு கொண்டு போகின்றவனின்
நாளைய புன்னகைக்கு
எளுப்பமாய் மறக்ககழிந்த பூதகாலத்தின்
அற்ப நிமிடங்களாயிருக்கலாம்
ஆனால்
என்னைப்பொறுத்தவரை
ஒர்மையிலிருத்தி காத்துவிட
அவ்வற்ப நிமிடங்களே
மீதமிருக்கும் ஆயுட்பறியந்தம்வரை,,,!!!
அனுசரன்