மழையென்பது யாதென

மழைத்துளிதான்,
உனது மேனியில்
உருண்டதில்
வைரமானது !

======================

மழையில்
நீ
நனைவது
அபிஷேகம் !
உன்னை
நனைத்த மழை
தீர்த்தம் !

======================

நீ
நனைந்து மகிழ்ந்ததை
வானம் என்கிற
FB ல்
மழை போடும்
like தான்
வானவில் !

======================

நீயிருப்பதால்
இந்தப் பூமி
மழைப் பறவைக்கு
வேடந்தாங்கல் !

======================

மழை
பெய்யும் போது
வானம்
கருப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கும் !
வெட்கம்
பெய்யும் போது
நீ
சிவப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கிறாய் !

======================

இன்றைய
பூக்களின்
இதழ்களில்
எட்டிப் பார்க்கிறது
நீ
கையில் ஏந்தி
வழிய விட்ட
நேற்றைய மழை !

======================

வான் சிறப்பில்
வள்ளுவன்
எழுத நினைத்து
எழுதாமல் விட்ட
பதினோராவது குறள்
நீ மழையில்
நனைவது பற்றியது !

======================

மழையில்
நனைந்து வந்து
நீ
தலைதுவட்டிய
துண்டில்
மழை ஓவியம் !

======================

மழையின்
வானிலை அறிவிப்பில்
சொல்லப்படுகிறது
நீ
குடை மறந்து விட்டு
வந்த செய்தி !

======================

உன்னை
நனைத்த மழை
உணர்ந்தது
மழையென்பது
யாதென ..........!

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (27-Apr-15, 10:18 am)
பார்வை : 1680

மேலே