இந்து மக்கள் கட்சியின் தெய்வ வழிபாடுஎப்பொழுது காசு வெட்டி போட்டு மன சாந்தி அடைவார்கள்

இந்து மக்கள் கட்சியின் தெய்வ வழிபாடு.....எப்பொழுது காசு வெட்டி போட்டு மன சாந்தி அடைவார்கள்....?
இந்துக்களின் கலாசாரத்துக்கு எதிராகச் செயல்படும் நாத்திக அமைப்புகளை வீழ்த்த வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் உள்ள உள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து வழிபட்டனர்.
இந்த நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து வேண்டுதல் வைத்தால் அது நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதன்படி, கடவுள் இல்லை என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நாத்திக இயக்கத்தினருக்கு மாசாணியம்மன் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்த வழிபாடு நடைபெற்றது.
- இது செய்தி -
நமக்கு என்ன டவுட்டுனா....? மாசாணி அம்மன் என்ன தண்டனை வழங்குவார் நமக்கு...? பெரியார் இயக்கவாதிகளுக்கு / சமூக சீர்திருத்தவாதிகளுக்கு / கம்யூனிஸ்ட்களுக்கு...?
கண்ணுகளை குருடாக்கி விடுவாரோ...? கை கால்களை முடமாக்கி விடுவாரோ...? வாத நோய்களை உண்டாக்கி தண்டனை வழங்குவாரோ...?
ஒன்று அரை லட்சம் மக்கள் அழைக்காத / வேண்டாத / கும்பிடாத கடவுளோ / சாமியோ இல்லை....சிங்களவன் கற்பழித்து கொன்ற பெண்களையாவது காப்பாற்றி இருக்கலாம்.....!
மேற்கொண்டு மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவுக்கு வேண்டிய போதெல்லாம் சிறப்பு பூஜை திருப்பதியில்......!
- சங்கிலிக்கருப்பு -