அய்யாமேரி ஹார்ஃ ப் கொஞ்சம் தெளிவாக சொல்லக் கூடாதா
அய்யா......மேரி ஹார்ஃ ப் கொஞ்சம் தெளிவாக சொல்லக் கூடாதா....?
ஃபோர்டு அறக்கட்டளை, கிரீன்பீஸ் இந்தியா உள்ளிட்ட சமூக அமைப்புகளின் மீது, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தும் சட்டத்தை பிரயோகிப்பது சரியான நடவடிக்கை அல்ல.
இதுதொடர்பாக இந்தியச் சமூகத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதத்தை, அந்தச் செயலானது தடுக்கிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளோம் என்று மேரி ஹார்ஃப் தெரிவித்தார்.
அது என்ன இந்திய சமூகத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதம்.....? இந்த தடை எவ்வாறு தடுக்கிறது...?
உரக்கச் சொல்லவும் முடியாமல்....மௌனமாக இருக்கவும் முடியாமல் விழி பிதுங்கும் கார்ப்பரேட் கும்பல்கள்....எனலாமா...?
ஆனால் இவர்கள் சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் உள்ள சமாச்சாரம் என்னவென்று எங்கே சொல்லுங்கள் பாப்போம் நண்பர்களே / தோழர்களே....!
- சங்கிலிக்கருப்பு -