பத்தியை பிரிக்கமுடியவில்லை

உன்னை மறக்கடிக்கடிக்கும்
காலத்தின் சக்தியை
பிடிங்கி எறிந்துவிட்டு
அமர்ந்திருக்கிறேன்.
தனக்கு முன் ஒன்றற்ற
சில பூஜ்ஜியங்களாக
மற்ற எல்லாவும் எனக்கு
நீயின்றி.
எனையடைத்து பூட்டப்பட்ட
ஒரு கண்ணாடியறையில்
சாவித்துவாரம் வழியே
உலகை பார்ப்பவனாகிறேன்.
மழையும் பனியும்
ஆகாயம் வீசும் கற்களாகவே.
உன் முதல் முத்தம் முடிவுற்று
சற்றும் சலனமின்றி இமைக்கா
பொழுதொன்றில் உனை
இரசித்த அட்சய சுகங்கள்
இதயம் பிய்க்கிறது.
செல்பேசிச் செயலியொன்றின்
நிலைதன்னில் என் செல்லப்பெயரும்
முகப்புப்படமென என் நிசப்பெயர்
சூட்டிய உன் செல்லப்பூனையும்
அழைப்போசை தன்னில்
ஆவாரம்பூவு ஆறேழு நாளாவும்
நம் சந்திப்பிலெல்லாம் உன்
முதல் செயலாக என் மோதிரம்
திருகி விரல்வழி களவு தொடங்கும்
உன் திரு முயற்சியும்
நவீன தேனீர் கடையை
என்னோடு தவிர்க்கும் நீ
நுரைக்குமிழூதும் குழலொன்றை
பங்கிட்டு ஒரு முட்டை ஊத
இதையுடைக்கும் காற்றெல்லாம்
நம் காதலாக என்றுச்சொல்லி
என் தோளில் சாய்ந்ததும்
உனக்கொரு அவசர அழைப்போ
எனக்கொரு அவசிய பணியோ
எல்லா வார்த்தைகளையும்
ஒனறுசேர்த்து மௌனப்பந்தாக்கி
விழிகள் விளையாடிய
அற்புதமொன்றை உடைக்கயில்
தன்னிலை திரும்பிய நாம்
புன்னகை சிந்தும் நமது
அதிக சதவீத சந்திப்புகளும்
முத்தக்காட்சிகளில் மூழ்கும்
என் கண்களில் ஆரஞ்சு அமிலம்
தெளித்து நீ தொடையில் கிள்ளி
கன்னம் நெருங்கியதும்...
எப்படி முடிந்தது உன்னால்
ஏதோ ஒரு காரணம் சொல்லி
திரும்பாமல் நடந்துச்செல்ல
இவையெல்லாம் மறக்காமல்
கண்ணீர் துடைத்தபடி.
அறுந்துவிட்ட கனவுகள் கூட
உருண்டோடும் மணிகளாய்
அங்குமிங்கும் சிதறுமே
மூளைச் சாலையில்.
பிரிந்தது நீயாகவே இரு
உனை நினைத்து எழுதும்
ஒரு கவிதையில்
பத்தியைக் கூட என்னால்
பிரிக்கமுடியவில்லை..!!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (28-Apr-15, 1:33 am)
சேர்த்தது :
பார்வை : 139

மேலே