தொலைந்த கவிதை

மாலை நேரத்து
குளிர் காற்றில்..
மலைப்பாதையில்..
மெளனமாக நினைவுகள்
முன்னே போக..
பின் தொடர்ந்து நான்..
போய்க்கொண்டிருக்கும் நேரம்..
என் கையில் இருந்த கையேடு
கீழே விழுந்து ..
அதிலிருந்து..
எவ்விக் குதித்தபடி
ஓடியது என் கவிதையொன்று..!

பிடிக்க முயன்றேன்..
தாவி..முடியவில்லை
என் கைகளுக்கு பிடிகொடாமல்
அடுத்த வளைவில்..
குதித்து ஓடியது அது..!

இன்னும் நான் ..
நிறைவு செய்யாத ..
குட்டிக் கவிதையது..
இளம் கன்று பயமறியாதே ..
எங்கேனும் முள்ளில் சிக்கி
கிழிபடுமோ..
என்று மனம் பதைக்க..
மூச்சிரைக்க
ஓடினேன்..!

சற்று தூரத்தில்
அங்கே..
அவளது ..
கைகளில் தஞ்சமான
என் கவிதை..
முழுமை பெற்றது ..!

..அவளும்..
எப்போதோ
நான் தொலைத்த
கவிதையென்பதால் !

எழுதியவர் : கருணா (30-Apr-15, 4:00 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : tholaintha kavithai
பார்வை : 699

மேலே