இது யாரின் அழுகுரல்

ஆணிபோல் இறங்கி நின்ற மரம்
மண்ணை இறுக்கிக் கட்டிக் காத்தது
முத்தம் சிந்திச் செல்லும் மேகம்
நிலத்தைப் பசையாக்கி வைத்தது

பசை உள்ளவரை நீண்ட வேர்கள்
மண் சிதையா வண்ணம் பிணைத்தது
இயற்கையின் சிரசை கான்கிரீட் கலவை
மேவும்வரை மண் உலராமல் நிலைத்தது

மலையரசிகளின் மணிமகுடமான பசுமை
நாம் ரசிக்கப்படும் வரை மிளிர்ந்தது
நாம் அகலக்கால் வைக்கும்வரை
இயற்கை அமைதியுடன் வாழ்ந்தது

பேராசை பிடித்தவன் நுழைந்ததும்
எல்லாம் சிதைகின்றது, தொலைகின்றது !
இயற்கை தன் சோம்பல் முறிக்கையில்
கட்டிடங்களே அவனின் கல்லறை ஆகின்றது !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (4-May-15, 11:35 am)
பார்வை : 114

மேலே