எறும்பு கூட்டம் ஒன்று கண்டேன்
எறும்பு கூட்டம் ஒன்று கண்டேன் !
ரசித்து நின்றேன் !
எதோ பேசி கொள்கின்றன !
காது கேக்கும் செவிடனாய்
பாசை தெரிந்த ஊமையாய்
பார்த்து கொண்டு இருந்தேன் !
ஏழாம் அறிவு எனக்கு இருந்து
என்ன பயன்
எறும்பு மொழி தெரியலியே !
எல்லாம் ஓர் பிறப்பு
ஓரிடத்தில் சேரும் இறப்பு
எதிரும் புதிரும் எப்போதும்
இந்த மனிதர் பார்க்கையில் !
கூடி வாழ்ந்து ஓடி கொஞ்சி
ஒன்றாய் உண்டு ! உயர்வு !
தாழ்வு !பேதம் இல்லாமல்
இருக்கும் எறும்பின் சாதி சான்றிதழ்!
எனக்கும் வேண்டும் என்று
தாசில்தாருக்கு விண்ணப்பம் !
காசில்லாதோர்க்கு கதவு திறக்குமா
முரட்டு அலுவலகம் !
-செந்தூர் பாண்டியன்