வரலாற்று பிழை
கற்பு கரசி யார் ?
சட்டென்று கண்ணகி
கண்ணகி என சொன்னால்
தப்பல்ல ஆனால்
தவறு
இளங்கோவடிகள் இயற்றிய
செய்யுளுக்கு வேண்டுமானலும் பொருந்தலாம்
கற்பு கரசி பட்டம்
ஆனால் நிஜ உலகில் ?
மனித இனத்தின் ஒவ்வொரு நிலையிலும்
தாயாய்
சகோதரியாய்
காதலியாய்
தோழியாய்
மனைவியாய்
குழந்தையாய்
இன்னும் எத்தனையோ உறவுகளாய்
நம்மோடு கலந்து வாழும் பெண்கள்
அனைவரும் கற்பு கரசிகள் தானே
பின் எதற்கு இந்த கற்பு எனும் பட்டம்
கண்ணகி கற்பு கரசியா
இல்லையா என்பது என் கேள்வியும் அல்ல
அதற்கான விடையை
நான் தேடவும் அல்ல
கற்பு கரசி என்ற சொல்லை
ஒரு பெண்ணிற்கு வழங்கி
எம் உறவுகளையும்
மற்ற பெண் இனத்தையும்
கொச்சை படுத்தாதீர்கள்
என்ற ஆதங்கம் மட்டுமே
தவறிருந்தால் மன்னிக்க