அப்பாவின் ரசிகன்
ரசிகனாய்
நான்!
கதாநாயகனாய்
என் தந்தை!
அவரை
அண்ணாந்து பார்த்தே
வளர்பவன் நான்
இன்றும்!
முதுகு பக்கம்
தட்டி கொடுப்பதற்கு மட்டுமே என்று
சொல்லியும் செய்தும்
வருபவர்!
தராசு பிடியின்
நேர்மையில்
நிக்காத ஓட்டத்துடன்
உழைப்பில் ஆசானாய்!
காயங்களை தரும்
காதல் தோல்வி
எனக்கோ என்
தந்தையை தந்தது!
தாயவள் கோபம்
கண்ணீரில்
தந்தையின் பாசமோ
கோபத்தில்!
என்
வாழ்க்கையின்
ஆதியாய் இருந்தவர்
அந்தமுமாய் இருக்க
வேண்டுகிறேன்!!!